Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குழந்தையை கொன்ற தாய்…. தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. காதல் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தனது குழந்தையை கொன்றுவிட்டு இளம் பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகரில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள துணிக்கடையில் டிரைவராக பணிபுரிந்த போது அங்கு வேலை பார்த்த கவிதா என்ற பெண்ணை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். அதன் பிறகு கணவன் மனைவி இருவரும் காமராஜர் நகரில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஹரிஹரன் என்ற ஒரு வயது மகன் இருக்கின்றான். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மாலத்தீவுக்கு ராம்குமார் வேலைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் கவிதா அவருடைய மகன் மற்றும் கவிதாவின் மாமியார் ராணி போன்றோர் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கவிதாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரால் குழந்தையை சரியாக பராமரிக்க இயலவில்லை. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ராணி வேலைக்கு செல்லாமல் குழந்தையை பராமரித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து அருகில் உள்ள சந்தைக்கு காய்கறி வாங்குவதற்காக ராணி சென்றுள்ளார். அதன் பின் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது கவிதா சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இந்நிலையில் தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை பார்த்த போது குழந்தையும் அசைவு இல்லாமல் இருந்துள்ளது. இதனால் அருகில் உள்ளவர்கள் கவிதாவையும் குழந்தையையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் கவிதாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அஞ்சுகிராமம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் கவிதா தனது குழந்தையின் கழுத்தை துணியால் இறுக்கி கொன்றுவிட்டு அதன் பிறகு தான் தற்கொலை செய்ய முயற்சி செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து கவிதாவின் செல்போனை கைப்பற்றிய காவல்துறையினர் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கவிதா இவ்வாறு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு உறவினர்கள் மற்றும் அவரது மாமியார் ராணியிடமும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |