ஹவாய் நிறுவனம் தனது ஹவாய் Y 9 பிரைம்ஐ ஆகஸ்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த வாரம் டீஸர்கள் மூலம் இந்தியாவில் தனது முதல் பாப்-அப் கேமரா தொலைபேசியை அறிமுகப்படுத்தியது. இதனை அமேசான் நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.ஹவாய் Y9 பிரைம் 2019 முதன்முதலில் உலகளவில் மே மாதத்தில் அதிகாரப்பூர்வமாகி சவுதி அரேபியா மற்றும் கென்யா போன்ற சில சந்தைகளில் மட்டும் விற்பனை செய்யப்பட்டது .
இந்த சந்தைகளில்,இதன் விலை சுமார் ரூ .15,000 முதல் ரூ .17,000 வரை உள்ளது, மேலும் அதிகாரப்பூர்வ இந்திய விலையும் இதேபோல் இருக்கும் என்று அந்நிறுவனத்தினர் எதிர்பார்க்கிறார்கள். ஹவாய் Y9 பிரைம் என்பது,ஜனவரி மாதம் ரூ .15,990 க்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒய் 9 ஐ பின்தொடர்வதாகும்.
ஹவாய் Y9 பிரைம் 2019 மே மாதத்தில் இத்தாலியில் அதிகாரபூர்வமான P SMART Z உடன் மிகவும் ஒத்திருக்கிறது. உண்மையில் இரண்டு தொலைபேசிகளும் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் அடிப்படையில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை Y9 பிரைம் மூன்று கேமரா அமைப்பை உடையது ஆனால் P SMART Z, இரட்டை கேமராக்களை உடையது.இதன் வருகை இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்புகளை உருவாக்கியுள்ளது என்று தான்கூறவேண்டும்.