பிரபல நடிகை ஹன்சிகாவின் வீட்டில் திருமண விழா கொண்டாட்டம் களைகட்டி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, சிம்பு உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகை ஹன்சிகா. இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவரது 50வது படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
இந்நிலையில் ஹன்சிகாவின் அண்ணன் பிரசாந்த் மோத்வானிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் மார்ச் 20ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூரில் அவருக்கு திருமணம் நடைபெற உள்ளது. அதற்காக அங்குள்ள ஒரு அரண்மனையை வாடகைக்கு எடுத்துள்ளனர். இதனால் ஹன்சிகாவின் வீட்டில் திருமண விழா கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.