Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா செய்த ஊழல் பற்றி பேசவா ? எல்.முருகன் பதிலடி …!!

மறைந்தவர்களை பற்றி பேசுவது நாகரிகமாக இருக்காது என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மாநில அரசால் ஒரு ஆண்டுக்கு 6கேஸ் இலவசமாக கொடுக்க முடியும் என்றால் மத்திய அரசால் ஏன் முடியாது ? என்ற கேள்விக்கு, 8 கோடி ஏழை தாய்மார்களுக்கு, சகோதரிகளுக்கு இலவசமாக கேஸ்  இணைப்பு கொடுக்கப்பட்டது பாஜக தலைமையிலான ஆட்சியில் தான்.  திராவிட முன்னேற்றக்கழகமும், காங்கிரசும் ஆட்சியில் இருக்கும்போது அதைப்பற்றி யோசிக்கவே இல்லை.  2014க்கு முன்னாடி நாம் யாராவது நம்முடைய தாய்மார்கள் பற்றி சிந்தித்து இருக்கோமா.

திமுக எதுவும் சொல்லுவார்கள், ஆட்சிக்கு வந்த பிறகு மறந்துவிட்டு ஊழல் செய்வதும், கட்டப் பஞ்சாயத்து செய்வதும், நில அபகரிப்பு செய்வதும் தான்  பிரதானமாக வைத்திருபற்கள்.  காங்கிரஸ் கட்சிக்குள்ள சண்டை போடாமல் இருந்தா அது ஒரு கேள்வி. சண்டை போடாம இருந்தா அது ஒரு கேள்வி. திமுகவை ஊழல் ஊழல் என சொல்லுறீங்க, அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் ஊழல் செய்துள்ளார் என்ற கேள்விக்கு,

மறைந்தவர்களைப் பற்றி பேசுவது அநாகரீகம். அதை பற்றி பேசுவது  சரியாக இருக்காது என எல்.முருகன் பதிலடி கொடுத்தார். பிறகு ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா இருக்கின்றார் என்ற கேள்விக்கு, சசிகலா அதுக்கான தண்டனை அனுபவிச்சிட்டு வந்துருக்காங்க. அவுங்க அரசியலில் இல்லைனு சொல்லிட்டாங்க எனவே அதை பற்றி பேசுவது சரியாக இருக்காது என தெரிவித்தார்.

Categories

Tech |