Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி தொகுதியில்…. 7வது முறையாக களமிறங்கும் எடப்பாடி….!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியலில் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதுடன் வேட்புமனுவையும் தாக்கல் செய்து வருகின்றனர்.

இதையடுத்து அதிமுகவினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகினறனர். இந்நிலையில் எடப்பாடி தொகுதியில் 7-வது முறையாக போட்டியிடும் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி இடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 1989ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முதலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட ஈபிஎஸ் இதுவரை நான்கு முறையும், இரண்டு முறை தோல்வியையும் சந்தித்துள்ளார். 1989 இல் ஜெயலலிதா அணியில் சேவல் சின்னத்தில் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |