கர்நாடக மாநில அமைச்சருடன் நெருக்கமாக இருந்த பெண் தனக்கு பாதுகாப்பு கேட்டு உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடக மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சராக பதவி வகிப்பவர் ரமேஷ் ஜர்கிஹோலி (60வயது). இவர் அப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி அவருடன் பலமுறை பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் அவர்கள் இருவரும் தனிமையில் இருந்த வீடியோ காட்சிகள் அந்த பெண்ணிடம் இருப்பதை அறிந்து கொண்ட அமைச்சர் “அந்த வீடியோவை தன்னிடம் கொடு இல்லையென்றால் உன் குடும்பத்தையே அழித்து விடுவேன்” என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் பயந்து போன அந்த பெண் அமைச்சர் விடுத்த இந்த கொலை மிரட்டல் குறித்து சமூக ஆர்வலர் தினேஷ் கலாஹள்ளியிடம் கூறியுள்ளார். அதன் பின்னர் கடந்த வாரம் இளம் பெண்ணுடன் அமைச்சர் நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோ உள்ளூர் செய்தி சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர் தினேஷ் கலாஹள்ளி பெங்களூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அமைச்சரின் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் அமைச்சருடன் வீடியோவில் நெருக்கமாக இருந்த பெண் “ரமேஷ் ஜர்கிஹோலியுடன் நான் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியானதால் தனது மானம் மரியாதை போய் விட்டதாகவும், இந்த எப்படி வெளியானது என்று தனக்கு தெரியாது? என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ வெளியானதால் எனது பெற்றோர் 2 முறையும், நான் 3 முறையும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் எனக்கு அரசியல் பின்புலம் எதுவும் கிடையாது. இந்நிலையில் இந்த வீடியோ வெளியானது தொடர்பாக எனது குடும்பத்தை தொடர்ந்து அசச்சுறுத்தி வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் எனது குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.