Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இது உடம்புக்கு ரொம்ப நல்லது” தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு…. அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

மண்பானைகள் உற்பத்தி முடிவடைந்த நிலையில் வருகின்ற கோடை காலங்களில் விற்பனை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆவலப்பம்பட்டி, பொன்னாபுரம், நல்லம்பள்ளி, பெரும்பதி, வேட்டைகாரன்புதூர் போன்ற இடங்களில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணியானது அதிக அளவில் நடைபெற்றுள்ளது. கடந்த 20 நாட்களுக்கு முன்னரே இந்த ஆண்டு மண்பாண்டங்கள் தயாரிப்பு முடிவடைந்த நிலையில் எதிர்பார்த்த அளவு இன்னும் மண்பானைகளின் விற்பனை அதிகரிக்கவில்லை. இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறும்போது, குளிர்சாதன பெட்டி குளிர் நீரை விட மண்பாண்டத் குளிர்நீர் உடம்புக்கு நல்லது எனவும், மண் பானை நீரை குடித்தால் தாகம் உடனடியாக அடங்கும் எனவும் கூறியுள்ளனர்.

மேலும் மண் பானையில் உள்ள நீரை குடித்தால் உடம்புக்கு எந்தவித பக்கவிளைவும் ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 10 லிட்டர், 15 லிட்டர் என இரு வகை பானைகள் உற்பத்தி செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இன்னும் சில நாட்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது மண்பானை விற்பனையானது அதிகமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் 60 வயது கடந்த தொழிலாளர்களுக்கு மண்பாண்ட தயாரிப்பு தொழில் பாதிப்பை தவிர்க்க மாதம் 2,000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |