Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“சுதந்திரமாக சுற்றி திரிய ஆசை” 4 சிறுவர்களை மடிக்கி பிடித்த காவல்துறையினர்…. பாதுகாப்பை பலப்படுத்தப்பட்ட கோரிக்கை…!!

கூர்நோக்கு இல்லத்தில் இருந்த வார்டனை தாக்கிவிட்டு தப்பி ஓடிய நான்கு சிறுவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து விட்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள லட்சுமி மில் சந்திப்பில் இருக்கும் கூர்நோக்கு இல்லத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 11 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இரவு சாப்பாட்டிற்காக வெளியே விடப்பட்ட 11 சிறுவர்களில் 6 சிறுவர்கள் திடீரென வார்டனை தாக்கி, அவரை அவர்கள் தங்கி இருந்த அறையில் தள்ளி வெளிப்புறமாக பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனை அடுத்து 7 மணிக்கு சிறுவர்கள் தப்பி ஓடிய நிலையில் அறையில் இருந்து போராடி வெளியே வந்த வார்டன் இரவு 10 மணிக்கு ரேஸ்கோர்ஸ் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பிறகு 2 மணி நேரம் தாமதமாக காவல்துறையினர் சிறுவர்களை பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த சிறுவர்கள் உடுமலைக்கு தப்பி ஓடியதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததால் உடுமலை பகுதியில் காவல்துறையினர் நடத்திய தீவிர தேடுதலில் 4 சிறுவர்கள் மாட்டிக்கொண்டனர். மேலும் தப்பியோடிய 2 சிறுவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்து தப்பியோடிய சிறுவர்கள் கூறும்போது சுதந்திரமாக வெளியில் சுற்றித் திரிய வேண்டுமென்ற ஆசையில் தப்பியதாக காவல்துறையினரிடம் கூறியுள்ளனர். மேலும் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து இதுவரை 5 முறை சிறுவர்கள் தப்பி ஓட முயற்சி செய்ததால் அங்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |