Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இரத்தத்தை குடித்த சிறுத்தை…. இறந்து கிடந்த ஆடுகள்…. உச்சகட்ட அச்சத்தில் பொதுமக்கள்…!!

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை ஆடுகளை கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெத்திக்குட்டை பகுதியில் துரைசாமி என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மேய்ச்சலுக்காக வெளியே தோட்டத்தில் 3 ஆடுகளை கட்டிவிட்டு துரைசாமி அங்கிருந்து சென்றுவிட்டார். இதனை அடுத்து அதிகாலை ஆடுகள் திடீரென வித்தியாசமாக சத்தம் போட்டதால் துரைசாமி வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது கழுத்து மற்றும் பல இடங்களில் ரத்த காயங்களுடன் இரண்டு ஆடுகள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்பகுதியில் சிறுத்தை வந்து சென்றதற்கான கால் தடயங்கள் இருந்ததால் சிறுமுகை வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் கால்நடை மருத்துவர்கள் இரண்டு ஆடுகளை பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அப்போது சிறுத்தை ஆடுகளின் கழுத்தில் கடித்து ரத்தத்தை குடித்து விட்டு, குதறி விட்டு சென்றது தெரியவந்துள்ளது. இவ்வாறு சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து ஆடுகளை கடித்ததால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை ஊருக்குள் நுழைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |