Categories
தேசிய செய்திகள்

4 வயது சிறுமியை… ” பாலியல் பலாத்காரம் செய்து துண்டு துண்டாக வெட்டி”…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!!

குஜராத்தில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

குஜராத்தின் தாத்ரா நகர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போனதாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் அந்தத் தெருவில் இருந்த திருமணமாகாத நபரின் வீட்டை சோதனை செய்தபோது அவர் வீட்டின் கழிவறையில் ரத்தக்கறையுடன் ஒரு மூட்டை கிடந்தது.

அதை திறந்து பார்த்தபோது அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து துண்டு துண்டாக வெட்டி அதில் வைத்திருந்தது தெரியவந்தது . இதையடுத்து சிறுமியின் உடலை மீட்டு காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் திருமணமாகாத அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |