சட்டசபை தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் குன்னம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா ? என்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் 3 இடங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
குன்னம் அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி தலைமையில் குன்னம் அருகே ஒதியம் பிரிவு சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சரக்கு வாகனம், கார், லாரி, வேன், பேருந்து ஆகிய வாகனங்களை நிறுத்தி பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்று சோதனை மேற்கொண்டனர். மேலும் வேகமாக செல்லும் காரை நிறுத்தி சீரான வேகத்தில் செல்லுமாறும், சீட் பெல்ட் கட்டாயம் அணிந்துகொள்ள வேண்டும் என்றும், அதிக பயணிகளை ஏற்றி செல்ல வேண்டாம் என்றும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.