Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும்”… இளைஞர் இயக்கம் சார்பில்… வாக்காளர் விழிப்புணர்வு கையொப்பம்..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூரில் இளைஞர்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு கையெழுத்து நடைபெற்றது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பெரம்பலூரில் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்றும், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்கு பதிவை வலியுறுத்தியும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இளைஞர்கள் இயக்கத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இளைஞர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சத்யா தலைமை தாங்கியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் தேர்தல் விழிப்புணர்வு தாசில்தார் நூர்ஜகான் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கையெழுத்திட்டுள்ளார். இந்த கையெழுத்து நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், கோபிநாத், கல்லூரியின் பேராசிரியரும், தேர்தல் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளருமான சந்திரமவுலி, சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி, சமூக ஆர்வலர்கள், வாக்காளர்கள், பெரம்பலூர் இளைஞர் இயக்கத்தை சேர்ந்தவர்கள், தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு கையெழுத்திட்டுள்ளனர்.

Categories

Tech |