Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சாலை பகுதிக்கு வந்த பெண் மான்… கடித்து குதறிய தெரு நாய்கள்… பிரேத பரிசோதனைக்கு பின் புதைப்பு..!!

பெரம்பலூர் அருகே தெரு நாய்கள் கடித்து குதறியதில் ஒரு வயதுடைய பெண் மான் பரிதாபமாக துடிதுடித்து இறந்தது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை அருகே ரஞ்சன்குடி வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் மான்கள் கூட்டமாக வசித்து வருகின்றது. இந்நிலையில் ஒரு வயது உடைய பெண்மான் ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி வி.களத்தூர் தைக்கால் பிரிவு பகுதியில் சாலை அருகே நேற்று காலை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு கூட்டமாக வந்த தெருநாய்கள் மேய்ந்து கொண்டிருந்த மானை துரத்தி கடித்துள்ளது.

கடித்து குதறப்பட்ட மான் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் வனக்காப்பாளர் பொன்னுமணி ஆகியோர் வனச்சரக அலுவலர் சசிகுமாரின் உத்தரவின் பெயரில் மானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனையை வி.களத்தூர் கால்நடை மருத்துவர் ராமன் முன்னிலையில் செய்தனர். அதன்பின் ரஞ்சன்குடி வனப்பகுதியில் மானின் உடலை புதைத்துள்ளனர்.

Categories

Tech |