Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவை எதிர்க்கும் பாஜக…! ”வலியுறுத்துவோம்” என நழுவிய எடப்பாடி …!!

நேற்று வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வரிடம் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள CAA சாத்தியமில்லை என பாஜகவின் சிடி ரவி தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு, நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன் …. எங்களுடைய அரசு மத்திய அரசை வலியுறுத்தும் என்று தான் தெரிவித்துள்ளோம். சிறுபான்மை மக்களை பாதுகாக்க கூடிய அரசு அம்மாவுடைய அரசு. அதன் வழியிலே சிறுபான்மை மக்கள் கோரிக்கையை வைத்தார்கள்.  அந்த கோரிக்கையை எங்கள் அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தும்.

எங்களுடைய தேர்தல் அறிக்கையை  ஒட்டுமொத்த கழகத்தினுடைய மூத்த நிர்வாகிகள், மூத்த  அமைச்சர்கள், மாண்புமிகு துணை முதலமைச்சருடன் நானும் ஒன்றாக இணைந்து ஒட்டுமொத்த மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றோம். இது மக்களுக்கு முழுக்க முழுக்க பயனளிக்க கூடிய தேர்தல் அறிக்கை.

மக்கள் என கோரிக்கைகள் வைக்கிறார்களோ அந்த கோரிக்கை நிறைவேற்றப்படும். எடப்பாடி சட்டமன்ற தொகுதி வறட்சியான தொகுதி,அந்த வறட்சியான பகுதியில் இருக்கின்ற ஏரி குளங்கள் எல்லாம் நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்கள். மாண்பு அம்மா இருக்கின்ற போது இந்த கோரிக்கை வைத்தேன். அப்பொழுது விவசாயி மக்களுடைய எடப்பாடி சட்டமன்ற தொகுதி வாழ்வு  மக்களுடைய கோரிக்கையை ஏற்று,

அம்மா அவர்கள் வறண்ட ஏரிகள் நிரப்புவதற்கு மேட்டூர் உபரி நீர் வெளியேறுகின்ற போது அந்த நீரை நீரேற்றம் மூலமாக எடப்பாடி தொகுதி,  அதே போல சங்கேரி  சட்டமன்ற தொகுதி, மேட்டூர் சட்டமன்றத் தொகுதி, ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் என அங்கெல்லாம் இருக்கின்ற வறண்ட 100 ஏரிகள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பை அப்பொழுது வெளியிட்டேன்.

இப்பொழுது நானே நேரடியாக திட்டத்தை அடிக்கல் நாட்டி அந்த திட்டத்தை துவக்கி வைத்திருக்கின்றேன். 100 ஏரிகள் நிரம்புகின்ற போது இந்த 4 சட்டமன்ற தொகுதியில் இருக்கின்ற வேளாண் பெருமக்கள் பயன்பெறுவார்கள். பொதுமக்கள் குடிப்பதற்கு தேவையான நீர் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

Categories

Tech |