நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அமமுக தலைமையில் கூட்டணி இருப்பதால் முதலமைச்சர் வேட்பாளர் தினகரன் அவர்கள் தான். நம்பிக்கைதான் வாழ்க்கை. முரசு சின்னம் எல்லாருக்கும் தெரியும், குக்கர் சின்னம் எல்லாருக்கும் தெரியும், தமிழ்நாட்டில் இனிமேல் புதிதாக அந்த இரண்டு சின்னங்களையும் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது.
அமமுகவும் – தேமுதிகவும் கூட்டணி அமைத்து இருக்கிறது, தேமுதிக 60 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது. யார் யார் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரே செகண்ட் உலகம் முழுவதும் பரவி விட்டது. அத்தனை பேருமே இந்த கூட்டணியே வரவேற்கிறார்கள். நிச்சயமாக நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள் மே 2ஆம் தேதி நாங்கள் இடம்பெற்றிருக்கும் கூட்டணி அமோக வெற்றி பெற்று அதிகமான இடங்களை வென்று எடுப்போம்.
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகின்றோம் என கேப்டன் முடிவு எடுத்து அறிவித்த பிறகு, அண்ணன் பொன்னார் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். என்னம்மா..! இப்படி ஆகிவிட்டதே, வேறு ஏதாவது வழி இருக்கிறதா ? என்று கேட்டார். நான் உரிமையோடு பேசுவேன் பொன்னார் அண்ணனுடனிடம். ஏன் அண்ணன் இப்போ வந்து கேட்கிறீர்கள் ?
இவ்வளவு நாள் பேச்சுவார்த்தைக்கு போகும்போது உங்களுக்கு எல்லாம் தெரியாதா ? நீங்கள் அப்பவே யாராவது பேசி இருக்கலாம். தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் நாங்கள் எல்லாருமே இருக்கின்றோம். நான்கு முறை போகிறார்கள்… வருகிறார்கள்… பேச்சுவார்த்தை இழுபறியாக போய்க்கொண்டிருக்கிறது,
இன்னும் முடிவாகவில்லை என்பதை நீங்கள் பேசி இருந்தால், ஒரு தெளிவான பதில் கிடைத்திருக்கும். இன்றைக்கு கேப்டன் அறிவித்து கூட்டணியை விட்டு வெளியே வந்த பிறகு நீங்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்வதால் எந்த பயனும் இல்லை என்று நாங்கள் சொல்லிட்டோம்.
கூட்டணியில் இருப்பவர்கள் அத்தனை பேரும் சமமானவர்கள். நாங்கள் சொன்னது ஒரு டேபிளில் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து பேசுவோம். தேமுதிக, பாமக, பாஜக அதிமுக நான்கு கட்சிகளும் ஒன்றாக உட்கார்ந்து கொண்டு யார் யாருக்கு எவ்ளோ நம்பர் ? யார் யாருக்கு எவ்வளவு தொகுதி என்பதே ஓபனாக பேசுவோம் என்பதே தான் நாங்கள் கேட்டோம். அதற்கு பதில் இல்லை என பிரேமலதா தெரிவித்தார்.