முன்னணி நடிகர் தல அஜித்தின் மங்காத்தா திரைப்படம் வரும் மே-1 தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் உயிர் பலியை ஏற்படுத்தி வந்தது. இதன் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்பு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதால் தொற்றின் பாதிப்பு சற்று குறையத் தொடங்கியது. ஆகையால் ஊரடங்கால் மூடப்பட்ட திரையரங்குகள், பொது வெளிகள், சற்று கட்டுப்பாடுகளும் திறக்கப்பட்டது.
இருப்பினும் திரையரங்குகளில் முன்பிருந்த கூட்டத்தைப் போல தற்போது இல்லை. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஆகையால், ரசிகர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு வர வைக்க வேண்டும் என்று பழைய படங்களை மீண்டும் ரிலீஸ் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, பில்லா ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. மேலும் மன்மதன் திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்நிலையில் அஜித் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான மங்காத்தா திரைப்படத்தை வரும் அஜித்தின் 50வது பிறந்த நாளான மே-1 ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியிடுமாறு அப்படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு அஜித் ரசிகர்களும் ஆதரவு அளித்து வருகின்றனர். இதனால் வரும் அஜித்தின் வரும் மே-1ஆம் தேதி திரையரங்குகளில் மங்காத்தா திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.