பிரபல நடிகை டாப்சி தனக்கு கவர்ச்சியாக நடிக்க பிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியான ஆடுகளம், ஆரம்பம், வை ராஜா வை, காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் நடிகை டாப்ஸி. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் எனக்கு கவர்ச்சியாக நடிப்பது பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “நான் சினிமாவிற்கு வந்த உடனே எனக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்தது. அதனால் என்மீது கவர்ச்சி பொம்மை என்ற முத்திரை குத்தப்பட்டது. கவர்ச்சியாக கதாநாயகர்களுடன் சேர்ந்து ஆடுவது, பாடுவது, செடி, மரம் போன்றவற்றை சுற்றி ஓடுவது போன்ற நடிப்பால் வளர முடியாது.
எனக்கு இருக்கும் திறமைக்கு இப்படி நான் செய்வது சரியில்லை என்பதை புரிந்து கொண்டேன். ஆனால் புரிந்தும் கண்ணை மூடி திறப்பதற்குள் 3 வருடங்கள் கவர்ச்சியாகத்தான் நடித்துள்ளேன். எனக்கு கதாநாயகியாக நடிப்பதை விட நடிகையாக நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் போதும். அந்த வாய்ப்பு எனக்கு தென்னிந்திய பட உலகில் கிடைக்கவில்லை.
ஆகையால் நான் இந்தியில் முயற்சி செய்தேன்.இப்போது என் மீது குத்தப்பட்ட கவர்ச்சி பொம்மை என்ற முத்திரையை நான் அழித்து விட்டேன். கடந்த ஐந்து வருடங்களாக வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தேசிய கதாநாயகி என்ற பெயரைப் பெற்று விட்டேன். மிகவும் கஷ்டமான கதாபாத்திரம் என்றாலும் அதற்கு ஏற்றவாறு என்னை மாற்றிக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்