Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தியின் ‘சுல்தான்’… அந்தோணிதாசன் பாடிய…’எப்படி இருந்த நாங்க’ பாடல் ரிலீஸ்…!!!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சுல்தான்’ படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சுல்தான்’. இந்த படத்தில ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ‘சுல்தான்’ படத்தின் டீஸர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் அந்தோணிதாசன் பாடிய ‘எப்படி இருந்த நாங்க’ பாடல் ரிலீஸாகியுள்ளது.

Categories

Tech |