திண்டுக்கல் அருகே கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள செக்கானூரணி பகுதியில் வேலுபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு ஆனந்தபாபு என்ற உள்ளார். ஆனந்தபாபு தனது தாயுடன் காரில் கோவை நோக்கி சென்றுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொட்டிசெட்டிபட்டி அருகே நான்கு வழிச்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. அதில் சாலையில் இருந்த தடுப்புச்சுவரை மீறி கார் எதிராக வந்து கொண்டிருந்த வேன் மீது வேகமாக மோதியது.
அந்த வேகத்தில் கார் சாலை ஓரமாக இருந்த தடுப்பை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் பிரேமாவிற்கு மோசமான காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆனந்த்பாபுவிற்க்கு மோசமாக காயங்கள் ஏற்பட்டது. அதன் பின் அவர் நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த குறித்து அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.