திண்டுக்கல் பழனியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் தேர்தல் செலவின பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ. ஆனந்தி முன்னிலை வகுத்துள்ளார். மாவட்ட தேர்தல் செலவின பார்வை அலுவலர் ராஜாகோஸ் தலைமை வகித்துள்ளார். இந்த கூட்டத்தில் தேர்தல் செலவின அலுவலர் பேசுகையில், தலைவர்கள் பிரச்சாரத்தின்போது அரசியல் கட்சியின் நடவடிக்கை கண்காணிப்பது குறித்தும், அரசியல் கட்சிக் கூட்டங்கள் நடைபெறும் போது அதற்கான செலவினங்களை பதிவிடுவது குறித்தும் எடுத்துரைத்தார்.
மேலும் வாகன சோதனையின் போது பறிமுதல் செய்யப்படும் பணம் மற்றும் பொருட்கள் குறித்து எந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கட்சி கூட்டங்கள் நடைபெறும் நிகழ்ச்சிகளை முறையாக வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார். அரசியல் கட்சி சார்ந்தவர்களுக்கு பாரபட்சம் என்பது காட்டக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார். இந்தக் கூட்டத்தில் பறக்கும் படை அலுவலர்கள், தேர்தல் கண்காணிப்புக்குழு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.