Categories
அரசியல் மாநில செய்திகள்

“எங்கிட்ட பணம் இல்லை” அவருக்கு பிக்பாஸ் மட்டும் போதும்…. ஹெலிகாப்டரில் போகலாம் – கமலை சாடிய சீமான்…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள்  தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பம், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சனம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அப்போது அவர் பேசுகையில், “நிஜமாகவே காசு இல்லாததால் தான் தேர்தல் வரைவு திட்டமும் வெளியிடவில்லை.

இந்த முறை தேர்தல் திடீரென வந்ததன் காரணமாக கையில் காசில்லை. பணம் இருப்பவர்கள்  தான் அரசியல் செய்ய முடியும் என்ற கோட்பாட்டை ஒழிக்கவில்லை என்றாலும், முதலாளிகளின் லாபத்தை நோக்கிய அமைப்பாக மாறி விடும். இல்லையென்றால் கேடுகெட்ட பணநாயகம் தான் வெல்லும். ஜனநாயகம் வெல்லாது” என்று தெரிவித்துள்ளார். மேலும் என்னிடம் காசு இல்லை. கமலுக்கு பிக்பாஸ் மட்டும் போதும். அவர் ஹெலிகாப்டரில் கூட போகலாம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |