Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த ரகசிய தகவல்… வசமாக சிக்கிய தொழிலாளி… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல் அருகே சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கிகள் தயாரித்து விற்பனையில் ஈடுபட்ட தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பழனிபட்டியில் சின்னு என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமாக தோட்டம் ஒன்று உள்ளது. அந்த தோட்டத்தில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் தோட்டத்திற்கு சென்ற மற்றும் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மரக்கட்டை மற்றும் இரும்பு குழாய்கள் ஆகியவை துப்பாக்கிகள் தயாரிப்பதற்காக வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சீன்னு மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து பின் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |