Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வடமதுரை மாரியம்மன் கோவில்… மாசி திருவிழா… கோலாகலமாக பூச்சொரிதலுடன் தொடக்கம்..!!

திண்டுக்கல் வடமதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் மாசி திருவிழா நேற்று பூச்சொரிதலுடன் தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட மதுரையில் சிறப்பு வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று மாசி திருவிழா பூச்சொரிதலுடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு மாரியம்மன் பூ அலங்காரத்துடன் வீதி உலா வந்தார். வீதி உலாவின் போது வழிநெடுகிலும் பக்தர்கள் மலர்களைத் தூவி அம்மனை வழிபாடு செய்தனர்.

விழாவில் அம்மன் சாட்டுதல் வருகின்ற 21-ம் தேதியும், அம்மன் உலா வரும் அற்புத நிகழ்ச்சி 23-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது. இதையடுத்து பூமிதி திருவிழா 28-ஆம் தேதியும், மஞ்சள் நீராட்டு விழா 30-ஆம் தேதியும் நடைபெறவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து கங்கையில் அம்மன் இறங்கும் நிகழ்ச்சியோடு விழா நிறைவு பெறுகிறது.

Categories

Tech |