எங்கள் கட்சிகாரர்கள் போராட்டம் செய்ய மாட்டார்கள் கட்டுப்பாடோடு இருப்பார்கள் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் 4மணி நேரத்தில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இது குறித்து பாஜக மாநில தலைவர் எல்.முருகனிடம், மதுரையில் போராட்டம் செய்றாங்க . அதுக்கு என்ன சொல்றீங்க . உங்க கட்சி காரங்களுக்கு என்ன சொல்ல போறீங்க ? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்க்கு பதிலளித்த அவர், எங்க கட்சிக்காரர்கள் யாரும் எந்தவித போராட்டமும் செய்யமாட்டார்கள். பாரதிய ஜனதா கட்சியினுடைய தொண்டர்கள் மிகவும் கட்டுப்பாடு மிக்கவர்கள்.
அது யாராவது ஒன்று, இரண்டு பேர் போராட்டம் செய்திருந்தால் தெரியாமல் செய்திருப்பார்கள். அவர்களும் அதை உடனடியா விலக்கி கொண்டார்கள். எங்களுடைய பாராளுமன்ற குழு தான் உச்சபட்ச அதிகாரம் படைத்தது. அந்த உச்சபட்சம் அதிகாரம் படைத்த பாராளுமன்ற குழு கூட்டமானது நேற்று இரவுதான் எட்டு மணிக்கு தான் முடிந்தது. அதற்கு பிறகு தான் அவர்கள் முடிவு செய்து வேட்பாளரை அறிவித்துள்ளார்கள்.
பாஜகவில் மூன்று , நான்கு மாதங்களுக்கு முன்பு இணைந்த குஷ்புவுக்கு சீட்டு, மதியம் பாஜகவில் இணைந்த திமுக எம்.எல்.ஏ சராவண்னுக்கு மாலையில் என்றால்… இத்தனை ஆண்டுகாலம் கட்சியில் உழைத்த நிர்வாகிகள் எவ்வளவு பேர் இருக்கீறார்கள் ? அவர்களுக்கு ஏன் சீட் கொடுக்கல ? என்ற கேள்விக்கு, எங்களுடைய எம்.ஆர் காந்தி நாகர்கோவிலினுடைய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.அவர் மிக பழமையானவர், ஜன சங்க காலத்தில் இருந்து கட்சியில் இருக்கின்றார். அதே போல குஷ்பு பிரபலமானவர், சினிமாதுறையை சார்ந்தவர், அவர் காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்தவர் என விளக்கம் அளித்தார்.