மேகன் நல்லவர் கிடையாது என்று தான் முன்னரே கூறினேன் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ட்ரம்ப், பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் நல்லவர் கிடையாது என்று நான் முன்கூட்டியே கூறினேன். இதனை தற்போது அனைவரும் கண்ணால் பார்த்து விட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். அதாவது அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த மேகனை டிரம்ப் விமர்சித்துள்ளார்.
“மேகனின் ரசிகன் நான் அல்ல” என்று கூறியதோடு, ஹரி அதிகமான அதிர்ஷ்டத்தை பெற வாழ்த்துக்கள். ஏனெனில் அவருக்கு அது தேவை என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ட்ரம்பின் முன்னாள் மூத்த ஆலோசகர் Jasan Miller மற்றும் ஒரு தகவலை தெரிவித்துள்ளார். அதாவது டிரம்ப், “மேகன் நல்லவர் கிடையாது அல்லது எதற்கும் பயன் இல்லாதவர்” என்ற அர்த்தத்தில் “Meghan’s no good” என்று கூறியுள்ளாராம்.
மேலும் இது தொடர்பில் செய்தி ஒன்றையே உருவாக்கலாம். எனினும் அது நல்ல யோசனை கிடையாது என்று டிரம்ப் கருத்தியுள்ளார். ஏனெனில் யாராவது மேகன் குறித்து தவறான கருத்து தெரிவித்தால், அவர்கள் ஒதுக்கப்படுவார்கள். உதாரணமாக, பயர்ஸ் மார்கனுக்கு நடந்ததை பாருங்கள் என்று கூறியுள்ளாராம்.
அதாவது மார்கன், “குட்மார்னிங் பிரிட்டன்” என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளர். இவர் ஹரி-மேகனின் பேட்டியில் மேகன் கூறிய எதையும் தான் நம்பவில்லை என்று கூறியதால், கடும் விமர்சனங்களை சந்தித்ததுடன் தொலைக்காட்சியிலிருந்தும் வெளிநடப்பு செய்தார். எனவே மேகன் தொடர்பில் பேசினாலே நமக்கு வம்பு தான் என்பது போல் கூறியிருக்கிறார் டிரம்ப்.