காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 15 அதிருப்த்தி எம்எல்ஏக்கள் திடீரென்று தங்களது பதவியை ராஜினாமா செய்தது, ஆளும் குமாரசாமி அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. தொடர்ந்து அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வந்த நிலையில், அதற்கு முடிவு கட்டும் விதமாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த தயார் என குமாரசாமி தெரிவித்தார்.
அதன்படி, கடந்த வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில் வாக்கெடுப்பு நடைபெறவில்லை. இதனிடையே இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்தார். இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து உறுப்பினர்களும் பேச அனுமதி வேண்டும் என்றுஅமளியில் ஈடுபட்டது காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது