சொத்தைப்பல் வராமல் தடுப்பதற்கான வீட்டு வைத்தியமும், தடுக்கும் வழிமுறைகளையும் இப்போது பார்க்கலாம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பல் சொத்தை பிரச்சினை இருக்கிறது. பல் சொத்தையாக இருந்தால் தாங்க முடியாத கடும் வலி, ஈறு வீக்கம் ஆகியவை ஏற்படும். இதை தவிர்க்க சில வழிமுறைகளை கடைபிடிக்கலாம்.
சொத்தை வராமல் தடுப்பது:
காலை மாலை இரண்டு வேளையும் பல் துலக்க வேண்டும்.
கடிக்கும் பகுதியை முன் பின்னாக துலக்க வேண்டும். நாக்கையும் சுத்த படுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு புட்டிப்பால் கொடுத்தவுடன் ஈறு பகுதியை நன்றாக துடைத்து விட வேண்டும்.
தினமும் ஒரு வெள்ளரிக்காய் மற்றும் காரட் சப்ப்பிட்டு வந்தாலே பல் சுத்தமாகும்.
சொத்தைப்பல் வலிக்கு வீட்டு வைத்தியம்:
உப்பு நீர் கொண்டு வாய் கொப்பளிப்பது.
கிராம்பு எண்ணெயை பஞ்சில் நனைத்து பல்வலி உள்ள இடத்தில் வைக்கலாம்.
பூண்டை நசுக்கி உப்பு சேர்த்து பல்வலி உள்ள இடத்தில் வைத்தால் வலி நீங்கும்.