Categories
உலக செய்திகள்

பெற்றோர்களே உஷார்…!! யாரையும் நம்பி உங்க குழந்தைகளை விடாதீங்க… அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

அமெரிக்காவில் பள்ளி சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்காக பராமரிப்பாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள விண்டம் நகரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் அந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரிடம் அழுது கொண்டே வந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் சிறுமியிடம்  விசாரித்தனர். அப்போது அந்த சிறுமி, ” தன்னை பராமரித்துக் கொள்ளும் நபர் என்னை தவறான பகுதியில் தொடுகிறார் என்று கூறியிருக்கிறார். அவர் மூன்று ஆண்டுகளாகவே 3 முறைக்கு மேல் இதே போன்று நடந்துள்ளார்” என்றும் அந்த சிறுமி கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் பராமரிப்பாளர் மார்க்கிலோ பெரீஸ்(44)  மீது புகார் அளித்தனர். புகாரின்பேரில் மார்க்கிலோ பெரீஸ்-ஸை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்  மீதான குற்றம் நீதிமன்றத்தில் நிரூபணமாகிவிட்டால் இவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. மேலும் 40 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |