விவசாயிகளின் போராட்டத்திற்காக மூடி வைக்கப்பட்டிருந்த டெல்லி-காசிப்பூர் சாலை தற்போது மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். டெல்லியை இணைக்கும் எல்லையோர நெடுஞ்சாலைகளில் கடந்த நவம்பர் 26-ஆம் தேதி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை தடுக்கும் பொருட்டு உத்தரபிரதேசம்-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் காசிப்பூர் எல்லையில் காவல் துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி வைத்திருந்தனர். இதனை விவசாயிகள் அகற்ற முற்பட்டதால் டிசம்பர் 3 ஆம் தேதி சாலை போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
தற்போது இந்த தேசிய நெடுஞ்சாலை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இது தொடர்பாக காஜியாபாத் காவல் துறையினரும், டெல்லி காவல்துறையினரும் கலந்துரையாடிய பிறகு சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பது என முடிவெடுக்கப்பட்டது. இந்த சாலை உத்திரப்பிரதேசத்தில் செல்வர்களுக்கு மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.