Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னது…! எடுபடவில்லையா ? … தேர்தலில் தெரியும்…. முதல்வர் பதிலடி ..!!

அதிமுக தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 6சிலிண்டர் அறிவிப்பு குறித்தான கேள்விக்கு தமிழக முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார்.

எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா 1989ஆம் ஆண்டு எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பை வழங்கி ,அப்பொழுது சேவல் சின்னத்தில் நான் போட்டியிட்டு நான்  வெற்றி பெற்றேன்.

அதிலிருந்து தொடர்ந்து எனக்கு பல வாய்ப்புகளை இதயக்கனி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அமைத்து கொடுத்தார்கள்.  அவர்களுடைய மாபெரும் மக்கள் செல்வாக்கோடு வெற்றி பெற்று, எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு திட்டங்களை நான் செயல்படுத்தி  இருகின்றேன்.

புரட்சித்தலைவி அம்மா ஆசியோடு சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை வழங்கி எனக்கு வாய்ப்பைக் கொடுத்தது எடப்பாடி சட்டமன்ற தொகுதி. இந்த தொகுதி மக்களுக்கு பல நன்மைகள்  செய்ய ஒரு அரிய வாய்ப்பை தந்தது.

அந்த வாய்ப்பின் மூலமாக எடப்பாடி தொகுதி ஏற்றம் பெற, எடப்பாடி தொகுதி முழுமையாக மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மை கிடைப்பதற்கு நான் அரும்பாடு பட்டுள்ளேன் என்பதை  இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் அறிக்கையில் 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று மக்கள் மத்தியில் பெரிதாக எடுபடவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. மக்கள் மன்றத்தில் எடுபடுகிறதா  இல்லை என்பது தேர்தல் முடிந்த பின் தெரியும் என தெரிவித்தார்.

Categories

Tech |