தமிழகத்தில் 6லட்சம் கோடி கடன் இருப்பது குறித்தான கேள்விக்கு தமிழக முதல்வர் அசால்ட்டாக பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை மக்கள் மகிழ்ச்சி தரக்கூடிய அறிக்கை. இன்றைக்கு பல்வேறு இடங்களிலிருந்து அடித்தட்டில் இருந்து உயர்தட்டு மக்கள் வரைக்கும் இந்தத் தேர்தல் அறிக்கையை வரவேற்கிறார்கள்.
பல சமூக ஆர்வலர்களும் வரவேற்கிறார்கள், வேளாண் பெருமக்களும் வரவேற்கின்றார்கள், வியாபார பெருமக்களும் வரவேற்கின்றார்கள். தேர்தல் அறிக்கையை கீழ் நிலையில் இருக்கின்ற, அடித்தட்டில் இருக்கின்ற மக்கள் கூட வரவேற்கிறார்கள். ஏற்கனவே 6 லட்சம் கோடி கடன் சுமை இருக்கும் போது இது சாத்தியமா என்று தினகரன் கேட்டிருக்கிறார் என்ற கேள்விக்கு,
இந்தியா முழுவதும் கடன் இருக்கிறது, எந்த மாநிலத்தில் கடன் இல்லை. அனைத்து மாநிலத்திலும் கடன் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் வளர்ச்சிப் பணிகள் தொய்வின்றி நடைபெற்று கொண்டிருக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி இன்றைக்கு பலம் வாய்ந்த கூட்டணி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.