சிவகங்கை எஸ்.புதூரில் எந்திரம் மூலம் நிலக்கடலை பயிரிடுவது குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூரில் எந்திரம் மூலம் எவ்வாறு நிலக்கடலை விதைப்பு செய்யலாம் என்று செயல்விளக்கம் நடைபெற்றது. இந்த செயல் விளக்கம் தமிழக அரசு வேளாண்மை துறை மூலம் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் இணைந்து மின்னமலைப்பட்டி கிராமத்தில் எந்திர மூலம் நிலக்கடலை விவசாயம் செய்வது குறித்து செயல்விளக்கம் நடத்தியது.
இந்த செயல்விளக்க பயிற்சிக்கு வேளாண் துறை உதவி இயக்குனர் அம்சவேணி தலைமை தாங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மின்னமலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி எந்திரம் மூலம் நிலக்கடலையை ஆண்டி நிலத்தில் பயிரிட்டு செயல்முறை விளக்கம் எடுத்துக் கூறப்பட்டது. இதில் வேளாண்துறை அலுவலர் பாலமுருகன், வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள், வேளாண் அலுவலர் ஞானசேகரன், எஸ்-புதூர் வட்டார வயலக திட்ட நிர்வாகி செல்வமணி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.