Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில்… மாசி பங்குனி திருவிழா… பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்..!!

சிவகங்கை மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் மாசி-பங்குனி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே பிரசித்தி பெற்ற மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி-பங்குனி திருவிழா தற்போது சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது.

இந்த கோவிலில் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினால் நினைத்தது நடக்கும் என்பது வழக்கம். இதனால் ஏராளமான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். திருவிழாவை முன்னிட்டு கோவிலில் பக்தர்கள் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும், பால் குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Categories

Tech |