Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எப்போது திறக்கப்படும்….? எதிர்பார்ப்பில் சுற்றுலா பயணிகள்…. அனுமதிக்காக காத்திருப்பு….!!

உயர் அதிகாரிகளின் அனுமதி கிடைத்த பிறகு தாவரவியல் பூங்கா திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாடுகாணி வனச்சரகத்தில் தாவரவியல் மைய பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் அரிய வகை தாவரங்கள், பராமரிப்பு கூடம், திசு வளர்ப்பு மையம், பெரணி இல்லங்கள், பசுமை பள்ளத்தாக்குகள், வனவிலங்குகளின் பதப்படுத்தப்பட்ட உடல் பாகங்கள் கொண்ட கண்காட்சியகம் போன்றவை அமைந்துள்ளது. இந்த தாவரவியல் பூங்கா கல்லூரி மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளின் கல்வி சுற்றுலா மையமாக மட்டுமே செயல்பட்டு வந்தது.

இதனையடுத்து அனைத்து தரப்பினரும் சுற்றுலா பயணிகளுக்கு தாவரவியல் பூங்காவில் சுற்றி பார்க்க அனுமதி வழங்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வந்துள்ளனர். அதன் பயனாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நாடுகாணி தாவரவியல் மையத்தை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக தாவரவியல் பூங்கா மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு பல்வேறு சுற்றுலாத் தளங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த தாவரவியல் மையம் மட்டும் இதுவரை திறக்கப்படாமல் இருப்பதால் பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் ஏமாற்றமடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, நாடுகாணி தாவரவியல் மையத்தை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் உயர் அதிகாரிகளின் உத்தரவு கிடைத்தவுடன் தாவரவியல் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |