Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள கிரீன்ஃபீல்ட் பகுதியில் சுரேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊட்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சுரேந்திரன் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து உடனடியாக ஊட்டி நகர மத்திய காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |