கொரோனா பரவலின் உச்சத்தை தடுக்க உடனடியாக ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று தீவிர சிகிச்சை மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெர்மனியை சேர்ந்தவர் கிறிஸ்டின் கராஜேயைன்னிடிஸ். இவர் அப்பகுதியில் தீவிர சிகிச்சை பதிவேட்டின் இயக்குனராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் பிரிட்டனில் தோன்றிய உருமாறிய கொரோனா தற்போது ஜெர்மனியில் பரவி வருவதாக இவர் கூறியுள்ளார் அதுமட்டுமின்றி இந்த கொரோனா பரவலை தடுப்பதற்காக ஜெர்மனி அரசு உடனடியாக ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி வைப்பதன் மூலம் நமக்கு எந்த லாபமும் கிடைக்கப் போவதில்லை, அதற்கு பதிலாக கொரோனா மிக வேகமாக பரவி அதன் உச்சநிலையை அடைந்துவிடும். மேலும் அதனை கட்டுப்படுத்துவது நமக்கு கடினமான செயலக மாறிவிடும். எனவே ஜெர்மன் ஆபத்தான மூன்றாவது அலைகளை நோக்கி செல்வதை தடுக்க உடனடியாக ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று கிறிஸ்டின் கடுமையாக எச்சரித்துள்ளார்.