Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அவ இல்லாம இருக்க முடியல…. தொழிலாளிக்கு நடந்த துயரம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மனைவி தன்னுடன் வாழ மறுத்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவடி தெருவில் சீனிவாசன் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இவர்களின் ஒரு குழந்தை இறந்த  பிறகு கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மகேஸ்வரி சீனிவாசனை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சீனிவாசன் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு தொலைபேசியில் மகேஸ்வரியை அழைத்து உள்ளார். ஆனால் அதற்கு மகேஸ்வரி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிவராசன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |