ரயில் பயணம் செய்யும்போது ,கொடுக்கப்படும் உணவு பிடிக்கவில்லை என்றால் ,இது பற்றி புகார் அளிக்க ரயில்வே நிர்வாகம் வசதியை ஏற்படுத்தி உள்ளது.
மக்களவையில் ரயில்வே அமைச்சரான பியூஷ் கோயல் இந்த தகவலை தெரிவித்தார்.ராஜதானி, சதாப்தி, டுரான்டோ, தேஜாஸ், வந்தே பாரத் போன்ற இரயில்கள் மற்றும் சிறப்பு இரயில்களில் வழங்கப்படும் உணவை ஆய்வு செய்ய , சிறப்பு ஆய்வாளர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இவ்வாறு இரயில்களில் வழங்கப்படும் உணவானது பிடிக்கவில்லை என்றால் , (ஐஆர்சிடிசி )க்கு
புகார் தெரிவிக்கலாம். ரயில்வே தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் புகார் தெரிவிப்பதற்காக வசதி வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது, என்று அமைச்சர் தெரிவித்தார். புகாரை தெரிவிக்க ஹெல்ப்லைன் எண் 139 மற்றும் ட்விட்டர் ,இ-மெயில் , இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களிலும் தங்களது புகாரை தெரிவிக்கலாம்.
கொரோனா காலத்திற்குப் பிறகு ,பிப்ரவரி மாதத்தில் ரயில்வே நிர்வாகம் கேட்டரிங் சேவைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ரயில் கேட்சிங் சேவை மட்டுமே செயல்படுத்தப்படும் என்றும் ரயில்களில் பயன்படுத்தப்படும் போர்வைகள், படுக்கை விரிப்பு போன்ற பயன்பாட்டுக்கு உரிய பொருட்களுக்கு தடை நீட்டிக்கப்படும் என்றும் கூறினார். இந்தக் கொரோனா நோய் தொற்று காரணமாக கேட்டரிங் சேவையை அரசாங்கம் முற்றிலுமாக தடை செய்தது. தற்போது கேட்டரிங் சேவை தொடங்கப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது .இவ்வாறு உணவை சுகாதார முறையில் பயணிகளுக்கு வழங்க சிறப்பு ஆய்வுக் குழு அமைக்கப்படுவதால் ,இரயில்வே பயணிகள் அச்சப்பட தேவையில்லை என்று அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார் .