டிடிவி தினகரன் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடுவதற்காக பல கட்சிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பலர் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அதிமுக திமுக என்ற பெரும் கட்சிகள் போட்டி போட்டு தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன்னிட்டு அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.