மேற்குவங்க முதலமைச்சரான மம்தா பானர்ஜி தன் கால்கள் அடிப்பட்ட நிலையில், சக்கர நாற்காலியுடன் பேரணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்தியாவில் சட்டமன்றத் தேர்தல் ஒருசில மாநிலங்களில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் மேற்கு வங்காளத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகின்றது. இதன் காரணமாக பாஜக,திரிணாமுல் காங்கிரஸ்க்கும் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. அம்மாநிலத்தின் முதலமைச்சரான மம்தா பானர்ஜி கடந்த 10 ம் தேதியன்று அவர் போட்டியிடும் தொகுதியான நந்தி கிராமத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் கூட்ட நெரிசலில் சிக்கி இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இவ்வாறு அடிபட்ட நிலையில் கூட கட்சிப்பேரணிக்கு சக்கர நாற்காலியில்அமர்ந்துகொண்டு, ஹஷ்ரா பகுதியிலிருந்து பேரணிக்கு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மம்தாவிற்கு ஆதரவளித்து, மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்கள் விட்டனர். இதற்கு முன் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தன்னுடைய வேதனையை காட்டிலும் பொதுமக்களின் வேதனையை உணர்வதாகவும்’.
இதற்காக தைரியமாக போராடுவேன் என்று கருத்தை பதிவிட்டார் . இந்தப் பேரணியில் மம்தா கூறும்போது, பொதுமக்கள் எங்களை வெற்றியடைய செய்தால் அவர்களுக்கு ஜனநாயகம் கிடைப்பதை உறுதியாக செய்வோம் ,என்று கூறினார். மேற்கு வங்காளத்திற்கு எதிராக செயல்படும் அனைத்து சதிகளும் முறியடிக்கப்படும் என்றும் ,நான் உடைந்த கால்களுடன் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் என்று தெரிவித்தார். ஏனெனில் ‘அடிப்பட்ட புலிதான் மிக ஆபத்தானதாக இருக்கும்’ என்று கூறினார்.