Categories
அரசியல் மாநில செய்திகள்

அடேங்கப்பா…! இப்படி கலக்கிட்டீங்க…. பட்டியலிட்ட எடப்பாடி… திரும்பி பார்க்கும் கட்சிகள் …!!

நேற்று வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த தொகுதியில் மக்கள் வைத்த கோரிக்கையை பெரும்பாலும் நிறைவேற்றி இருக்கிறேன். இன்னும் தேர்தல் நேரத்தில் பல கோரிக்கையை வரும் என்று எதிர்பார்க்கிறேன். அந்த கோரிக்கைகள் முழுவதும் நிறைவேற்றப்படும். நான் ஏற்கனவே சட்டமன்ற வேட்பாளராக இந்த தொகுதியில் போட்டியிடும் போது, இந்த தொகுதி மக்கள் எங்களுடைய குழந்தைகள் என்றைக்கு குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி படிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வந்தேன். பாலிடெக்னிக் கல்லூரி கொண்டு வந்தேன். b.ed கல்லூரி கொண்டுவந்து இன்றைக்கு கிராமத்திலிருந்து நகரம் வரை ஏழைக்குடும்பத்தில் இருக்கின்ற மாணவ மாணவி குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி படிக்க கூடிய சூழ்நிலை நாங்கள் உருவாக்கி தந்து இருருக்கிறோம் .

நல்ல சாலை வசதி செய்து கொடுத்து இருக்கிறோம். கூட்டுக்குடி  திட்டத்தின் மூலமாக இன்றைக்கு மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட காவல்கிணறு வழங்கி இருக்கின்றேன். அதிகமான மினி கிளிகள் திறந்து அந்த பகுதியிலே மருத்துவ சிகிச்சை கிடைக்க கூடிய சூழ்நிலை உருவாக்கிக் கொடுத்து இருக்கின்றேன். பல ஆரம்ப சுகாதார நிலை திறதிருக்கின்றேன். பல கால்நடை மருந்தகங்களை திறந்து இருக்கின்றேன். விலை மருந்தகங்கள் கால்நடை மருந்தகங்கள் திறந்து இருக்கின்றேன்

அதிகமான ரேஷன் கடை திறந்து இருக்கின்றேன். அங்கன்வாடி கட்டணத்தை கொடுத்து இருக்கின்றேன். இதைப்போல ஆரம்பப்பள்ளி துவக்கப் பட்டு இருக்கிறது. நடுநிலைப்பள்ளி புதிதாக கொண்டு வரப்பட்டிருக்கிறது. நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி இருக்கின்றோம். உயர்நிலை பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி இருக்கின்றோம். இன்றைக்கு   கிராமச் சாலையில் இருந்து நெடுஞ்சாலை வரை சிறப்பான சாலைகள் அமைத்து இருக்கின்றேன்.பல்வேறு வழித்தடங்களில் பேருந்து இயக்க வேண்டும் என்று கேட்டார்கள்.

அவர்களுடைய கோரிக்கையை ஏற்று நான் தொகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று அமைச்சராகி முதலமைச்சரானவுடன் அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக கிட்டத்தட்ட 19 வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கி, அவர்களுடைய கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்ற பட்டிருக்கிறது என்ற செய்தியை  இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அதைப்போல் புறவழிச்சாலை எடப்பாடிக்கு  வேண்டும் என்று கேட்டால் அதையும் கொடுத்தேன்.

மின்துறையில்  கோட்டப் பொறியாளர்கள் கேட்டார்கள், அதையும் கொடுத்தேன். நெடுஞ்சாலை துறையில் கோட்டப் பொறியாளர்கள் அதையும் கொடுத்திருக்கின்றேன். இப்படி மக்கள் என்னென்ன கோரிக்கை வைத்தார்களோ அத்தனை கோரிக்கைகளும் எங்களுடைய அரசு நிறைவேற்றப்பட்டிருக்கிறது என பட்டியலிட்டார். முதல்வர் போட்ட இந்த பட்டியல் எதிர்கட்சியினரை வாயடைக்க வைத்துள்ளது. முதல்வர் என்ன செய்தார் ? என்ன செய்தார் ? என சொல்லி பிரசாரம் செய்யும் அரசியல் கட்சிகளும் முதல்வரே இவ்வளவு செஞ்சி இருக்காரு என திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Categories

Tech |