நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஏடிஎம் மையங்களில் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த வருடத்திற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் நடந்து முடிந்தது. அதில் சில அரசு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் அனைவரும் மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.
அதன்படி அரசு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இரண்டு நாட்களாக ஈடுபட்டுள்ளதால் ஏடிஎம்களில் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பணப் பரிமாற்றங்கள், காசோலை பரிமாற்றங்கள் முடக்கத்தால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல ஏடிஎம்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் அத்தியாவசிய செலவுக்கு பணம் இன்றி தவிக்கின்றனர்.