தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி இன்று காலை 11 மணிக்கு முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கை தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்,அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொள்கிறார். அந்த ஆலோசனைக்குப் பிறகு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து மிக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.