Categories
உலக செய்திகள்

மியான்மரில் தொடரும் போராட்டம்… போலீஸ் துப்பாக்கி சூடு..! 4 பேர் உயிரிழப்பு..

மியான்மரில் மீண்டும் ஜனநாயக ஆட்சி அமைப்பதற்க்காக தொடர்ந்து மக்கள்  போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர்.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது.  இதில் முறைகேடு நடந்ததாக சர்ச்சை எழுப்பப்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி  முறியடிக்கப்பட்டு  பிப்ரவரி மாதம் முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மீண்டும் ஜனநாயக அரசை அமைக்கவும் கைது செய்யப்பட்டுள்ள அரசின் தலைமை ஆலோசகரான ஆங் சாங் சூகி உள்ளிட்ட தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து கடந்த சனிக்கிழமையன்று நடந்த போராட்டத்தில் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர் அதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில்  4 பேர் உயிரிழந்தனர். இது குறித்து ஐ நா மனித உரிமைகள் ஆணைய நிபுணர் தாமஸ், இதுவரை  மியான்மர் போராட்டத்தில்  70 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று  கூறியுள்ளார்.

Categories

Tech |