Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நீண்ட நாள் ஆசை நிறைவேறிடுச்சி…. இதற்காக 100% உழைப்பேன்…. மகிழ்ச்சியை கொட்டிய சமந்தா…!!

நடிகை சமந்தா தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறி விட்டது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சகுந்தலை புராணக்கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகை சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார்.”சகுந்தலம்” என பெயர் சூட்டப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கப்பட உள்ளது. அனுஷ்கா நடிப்பில் வெளியான ருத்ரமாதேவி படத்தை இயக்கிய குணசேகர் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் சமந்தாவிற்கு ஜோடியாக துஷ்யந்தன் கதாபாத்திரத்தில் பிரபல மலையாள இளம் நடிகர் தேவ் மோகன் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. இதில் கலந்து கொண்ட சமந்தா தனது பத்து வருட கனவு நிறைவேறிவிட்டது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “நான் சினிமாவில் இதுவரை 50 படங்களில் நடித்துள்ளேன். வில்லி, ஆக்சன் நாயகி என பல கதாபாத்திரங்களில் நடித்து உள்ளேன். ஆனால் எனக்கு சரித்திர படத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. தற்போது அது நிறைவேறிவிட்டது. இந்த கதாபாத்திரம் கிடைக்க எனக்கு பத்து வருடங்கள் ஆகிவிட்டது. ஆகையால் இப்படத்திற்காக 100 சதவீதம் நான் உழைப்பேன்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |