மதுரையில் மர்ம நபர்கள் பெண்ணிடம் 1 1/2பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நவீன யுகத்தில் இன்றளவும் சில நபர்கள் கொலை , கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டம் நாகமலைக்கோட்டையில் அசோக் குமார் என்பவர் வசித்து வருகிறார் . இவரது மனைவி தாரணி அருகிலுள்ள வங்கிக்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது வீட்டிற்கு திரும்பிய தாரணி மதுரை – தேனி ரோட்டில் நடந்து சென்றுள்ளார் .
அப்போது தாரணியின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 1 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர் . இதனைத்தொடர்ந்து தாரணி விடாமல் கூச்சலிட்டு கத்தியுள்ளார். இருப்பினும் சங்கிலியை பறித்து கொண்டு மர்ம நபர்கள் சிட்டாய் பறந்தனர். இதையடுத்து தாரணி காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.