கொரோனா பரவல் நாடு முழுவதும் பரவி வந்ததன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கல்லூரிகள் மற்றும் 9 முதல் 12 மாணவர்கள் மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் திருச்சி சேதுராபட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 14 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
பட்டுக்கோட்டை அரசு பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆலத்தூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆய்வக பெண் உதவியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோரத்தாண்டவமாடி வந்த கொரோனா சற்று குறைந்தது. இதையடுத்து தற்போது பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களை குறிவைத்து வேகமெடுத்து வருவதால் பெற்றோர்களிடையே அச்சம் நிலவியுள்ளது.