காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூபாய் 46 ஆயிரத்து 800 மதிப்பிலான 78 ஆரணி பட்டு புடவைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் 2021 காண சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடக்கவிருக்கிறது. இத்தேர்தலை முன்னிட்டு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க ஆங்காங்கே பறக்கும் படையினரை தேர்தல் குழு நியமித்தனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு சந்திப்பில் பறக்கும் படையினர் தோட்டக்கலை துறை அலுவலர் கோமதி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது ஆரணியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை சோதனை செய்ததில், அவர்களிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 46ஆயிரத்து 800 மதிப்பிலான 78 ஆரணி பட்டு புடவைகள் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பறக்கும் படையினர் பட்டுப்புடவைகளை பறிமுதல் செய்து வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.