தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் திரிஷ்யம் 2 திரைப்படத்தில் ராணா நடிக்க உள்ளாரா என்பதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்.
மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான “திரிஷ்யம் 2” திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். இதில் வெங்கடேஷ், மீனா, நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். திரிஷ்யம் 2 படத்தில் ஐஜி கதாபாத்திரத்தில் முரளி கோபி நடித்திருந்தார்.
தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் திரிஷ்யம் 2 திரைப்படத்தில் ஐஜி கதாபாத்திரத்தில் நடிக்க ராணா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியானது. இதற்கு ராணா தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், “திரிஷ்யம் 2 ரீமேக்கில் நான் நடிக்கவில்லை. அதில் நான் நடிக்கப் போவதாக பரவும் தகவல் உண்மையில்லை” என்று கூறியுள்ளார். இதனால் திரிஷ்யம்2 ரீமேக்கில் ராணா நடிக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது.