சீனாவின் தலைநகரமான பெய்ஜிங் மற்றும் சீனாவின் வடமேற்கு பகுதிகளில் இதுவரை காணாத அளவிற்கு மணல் புயல் தாக்கியுள்ளது.
சீனாவின் தலைநகரமான பீஜிங் மற்றும் சீனாவின் வடமேற்கு பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு மணல் புயல் தாக்கியுள்ளது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் காற்றில் மணல் கலந்து புழுதியாக காணப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து சீனா வானிலை மையம் தெரிவித்ததாவது, இந்த புழுதி மங்கோலியாவின் மத்திய பகுதிகளுக்கு பரவி கான்சு ,சான்சி ,ஏபேய் ஆகிய மாகாணங்களிலும் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சிறந்த காற்றின் அளவு 0 முதல் 50 புள்ளியாகவும் மற்றும் தூசியின் அளவு 50 மைக்ரோ கிராம் இருக்க வேண்டும்.
ஆனால் பெய்ஜிங்கின் காற்று மாசுபாட்டின் அளவு தற்போது 500 புள்ளிகளையும், காற்றிலுள்ள தூசு மற்றும் மாசுபாட்டின் அளவு 8000 மைக்ரோகிராமாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எல்லா ஆண்டிலும் சீனாவில் இதே போன்று காற்றில் மாசுபாட்டு ஏற்படும். ஆனால் இந்த மாபெரும் புயல் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டதே இல்லை என்று சீன வானிலை மையம் தெரிவித்துள்ளது.